Tuesday, 24 July 2018

நெடுந்தொகை கவிதைகள் - மலைகள்.காம் இதழ் 59


நெடுந்தொகை
————-
     1
மூடியிருக்கும்
திரைதான்
மூட்டுகிறது
முகத்தைப்
பார்க்கும்
தவிப்பை
  2
திறந்த
பிறகுதான்
தெரிந்தது
உடல்
வெறும்
கதவுதான்
  3
ஒவ்வொரு
முறையும்
ஒரு
முத்ததின்
மூலம்
நீங்கள் ருசிப்பது
ஒரு
கடலின்
வெவ்வேறு
உப்புகளை
 4
மூடிய
கதவுகளின்
அடியில்
தேங்கும்
விளக்கின்
வெளிச்சம்
போல
இரு
விழிகள்
அணைந்த பிறகும்
ஒளிருகிறதுன்
இதழ்கள்
  5
ஏழு
கடல்
ஏறவொண்னா
மலைகள்
பாதையில்லாப்
பாலைகள்
பகலிரவுகள்
மற்ற மனிதர்கள்
கற்ற நூல்கள்
கல்லா இளமை
எல்லாம்
கடந்து வந்தது
மடந்தையே
உனதிந்த
உடலின் முன்
மடங்கி
மண்டியிடத்தானா
?
6
ஒரு
முத்தத்தின்
ஈரம் போதும்
பிறகெப்போதும்
களையவியலாப்
பித்தின்
வித்துக்கள்
ந்ம்
மூளை ம்டிப்புகளினின்றும்
முளைத்தெழும்
7
சுரி குழல்
நெளிவு
தோடுடை
செவி
தொய்யா விள
முலைகள்
திருவிறக்கதின்
பாற்பட்ட
அரிவரித் தடம்
இறுகிய
இடை பற்றி
மெலிந்திறங்கிடும்
மென் கால்கள்
மேற் செல்ல
பொய்யா மலரெனெ
பூத்த சேவடிகள்
திருக் காணவ்ல்ல
தெள்ளியருக்கு
தேகமதும்
தெய்வமே
8
அவசரம்
அவசரமாய்
அள்ளி விழுங்கிப்போவதால்
அல்ல
விதவிதமாய்
சமைத்து
விருப்பறிந்து
பரிமாறவும்
வேண்டிக் கேட்டு
ருசித்துப்
புசிக்கவும்
செய்வதனால்தான்
அது
கலை
9
என்
பிணை மான்
இனிதுண்ண வேண்டி
நான்
கள்ளத்தில் உறிஞ்சும்
சுனைவாய சிறுநீர்
இம் முத்தம்
10
நவில்தொறும்
நல்கப் பெறுமந்த
நன்னூல்
நயம் போல
உண்ணும் தோறும்
உண்ணும் தோறும்
ஒன்றெனத் தீராது
ஒரோர் சுவை காட்டும்
இப்
பண்புடையாள் மாட்டு
பகிர்ந்து கொள்ளும்
முத்தங்கள்
 11
களைந்த பின்
தேடி
ஏமாறுகிறேன்
உடுத்தி
நீ
நடக்கையில்
பிறப்பித்து
உலவவிட்ட
இரகசியங்கள்
ஒவ்வொன்றையும்
  12
திரை கடலோடி
திசை யெட்டும் தேடி
திரவியம் சேர்த்தவனும்
தொன்று தொட்டு
துறை ஒன்றிலேயே
மூழ்கி
முத்தெடுத்தவனும்
பெற்றது
கைமண்ணளவு எனும்
பெறுமை உடைத்து
இக் காமம்

No comments:

Post a Comment